முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் முடிவுக்கு ஐ.நா. எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      உலகம்
UN 2023-09-23

Source: provided

ஜெனீவா : ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச எச்.ஐ.வி. அறிவிக்கையில், நிதி ஒதுக்கப்படாவிட்டால், எச்.ஐ.வி. நோய்க்கு எதிரான போராட்டம், பல ஆண்டுகாலத்துக்கு பின்னோக்கிக் கொண்டு சென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப், நிதிக் குறைப்பு நடவடிக்கைகள் எடுத்திருப்பதால், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படாவிட்டால், அந்த நோய்க்கு எதிரான போராட்டம் பல ஆண்டுகாலத்துக்குப் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எச்.ஐ.வி. நிவாரண அவசரகால திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி நிறுத்தப்பட்டதால், ஐக்கிய நாடுகள் அவையின் பல திட்டங்கள் முடக்கப்பட்டு, அதனால், வரும் 2029-ம் ஆண்டுக்குள் 60 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்படுவதோடு, 40 லட்சம் பேர் எச்.ஐ.வி.யால் மரணமடையும் நிலை ஏற்படும் என்கிறது அந்த தரவு. வளர்ச்சியடையாத நாடுகளில் எச்ஐவி பாதித்த மக்களுக்கு செய்யப்பட்டு வரும் பல்வேறு உதவிகள் உடனடியாக நிறுத்தப்படுவதன் மூலம், பல ஆண்டுகளுக்கு முன்னோக்கி, நிலைமை சென்றுவிடும் என்கிறது புள்ளி விவரங்கள்.

இதனால், 2030ஆம் ஆண்டு வாக்கில், எச்.ஐ.வி. என்பது பொதுமக்களுக்கு அபாயமான நோயாக மாறிவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய நிதியளிக்கும் ஒரு முக்கிய நாடு, திடீரென அதன் நிதியுதவியை நிறுத்தும்போது, அது உலகளவில், எச்.ஐ.வி.க்கு எதிரான சிகிச்சை மற்றும் நோய் பாதிப்பை தடுப்பது உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எதிர்மறையாக மாறிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து