முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு 2,300 பேர் உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      உலகம்
sun-2023-05-01

Source: provided

பாரீஸ் : ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு இதுவரை 2,300 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பா நாடுகளில் கடந்த மாதம் கோடைக்காலம் தொடங்கியது. அதில் இருந்து ஐரோப்பா நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் தொடங்கி சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் இயல்பை காட்டிலும் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 105 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் வீசியது. ஸ்பெயினில் 106 டிகிரிவரை வெப்பம் வாட்டி வதைத்தது. குறிப்பாக ஐரோப்பா நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் ஸ்பெயின் அருகே லிஸ்பனில் உள்ள மோரா நகரில் அதிகபட்சமாக 138 டிகிரிவரை வெப்பம் பதிவானது.

வெப்ப அலைவீச்சை சமாளிக்க இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக பிரான்சின் மெட்டியோ நகரம், ஜெர்மனியின் முனிச் ஆகிய நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. மேலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக வளாகங்கள் ஆகியவை பகுதிநேரமாகவே செயல்பட்டு வருகின்றன. நகரில் உள்ள பூங்காக்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தற்காலிக தண்ணீர் பம்புகள், செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இளைப்பாற அனுமதிக்கப்பட்டனர்.

ஜெர்மனியில், வறட்சி மற்றும் வெப்பம் காட்டுத்தீ உருவாகி அதில் பல ஏக்கர் விளைநிலங்கள் தீயில் கருகி நாசமாகின. தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட ஐரோப்பா ஏற்கனவே சுமார் 30 டிகிரி செல்சியல்வரை வெப்பம் உயர்ந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல், அதிகரித்து வரும் தொழில்புரட்சி, புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெப்ப அலைவீச்சு உயர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஐரோப்பா நாடுகளில் 2,300 பேர் உயிரிழந்ததாக அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து