எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அமெரிக்க அதிபராக பதவியேற்க தயார் என்று ஜே.டி.வான்ஸ் கூறினார்.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதாரம் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது 79 வயதாகும் டிரம்ப்பின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் தான் முழு உடல்நலத்துடன் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
முன்னதாக டிரம்ப்பின் கைகளில் சிராய்ப்பு காயங்கள் இருப்பதை காட்டும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இது குறித்து கடந்த ஜூலை மாதம் வெள்ளி மாளிகை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அடிக்கடி கைகுலுக்குவதால் ஏற்படும் லேசான தோல் எரிச்சல் பாதிப்பு டிரம்ப்புக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்க அதிபராக விரைவில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், 41 வயதான ஜே.டி.வான்ஸ், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “அதிபர் டிரம்ப் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வார். ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதிபராத பதவியேற்பதற்கு நான் தயாராக உள்ளேன். கடந்த 200 நாட்களில் எனது பணியின்போது எனக்கு கிடைத்த அனுபவங்களே மிகச்சிறந்த பயிற்சிகளாக அமைந்தன” என்று தெரிவித்தார். அமெரிக்க வரலாற்றின் மிக இளம் வயதுடைய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆவார். இவரது மனைவி உஷா வான்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


