Idhayam Matrimony

பா.ஜ.க. கூட்டணியில் வி.சி.க. இடம்பெறுமா? - நயினார் பதில்

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Nayenar-Nagendran

Source: provided

நெல்லை : நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பீகாரில் ராகுல்காந்தி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறி குற்றம் சாட்டி வருகிறார். அவருடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்று இருப்பது வருத்தம் அளிக்கிறது. ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ள 65 லட்சம் பேர் இறந்தவர்கள் மற்றும் வெளியூர்களில் குடிபெயர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க ராகுல்காந்தியுடன் சேர்ந்து மு.க.ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து வருகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சர் சேகர்பாபு என்னை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் ஒரு பயத்தில் என்னை அப்படி பேசி வருகிறார். ஆனாலும் பரவாயில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார். அவர் எங்கள் கூட்டணிக்கு வருகிறாரா? என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து