முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் அமைச்சர் நாசர் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      தமிழகம்
Accident-1

Source: provided

திருவள்ளூர்: சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள், மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தனர். 

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் செய்தியாளர்களிடம் கூறுகையில், சரக்கு ரெயிலில் ஏற்பட்டுள்ள தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 1 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தீயணைப்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர் கேட்டறிந்தார். தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணமாக அருகில் உள்ள வீடுகளில் இருந்து சமையல் சிலிண்டர்கள் அகற்றப்பட்டன. சிலிண்டரை எடுத்து செல்ல அப்பகுதி மக்களுக்கு உதவிய அமைச்சர் நாசர், மக்களுக்கு உணவு வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து