முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      இந்தியா
Air

Source: provided

மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1.40 மணிக்கு, ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய்க்கு செல்ல இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திட்டமிட்டபடி விமானம் புறப்படவில்லை.

கோளாறு சரிசெய்யப்பட்டதும் விமானம் புறப்படும் என்று பயணிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் கூறினர். ஆனால், எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும், மீண்டும் விமானம் எப்போது புறப்படும் என்பது குறித்து எந்த தகவலையும் சொல்லவில்லை. சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருந்தனர். மேலும், பயணிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த பயணிகள், விமான நிலைய முனையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து