முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குத்தகை விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீடு செய்யலாம்: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, குறுவை சாகுபடியில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்யலாம் என்ற நிலையை மாற்றி, குத்தகைதாரர்களும் பயிர்க் காப்பீடு செய்ய தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

விவசாயிகள் சாகுபடி செய்யும்போது, எதிர்பாராத மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், அதில் இருந்து விவசாயிகளை பாதுகாத்துக் கொள்ள பயிர்க் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், குறுவை பருவத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் ஜூலை 31-ம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்ய முடிகிறது. குத்தகை விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.38 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நிலையில், 179 விவசாயிகள் மட்டுமே, 110 ஏக்கருக்கு பயிர்க் காப்பீடு செய்திருந்தனர். இதையடுத்து, தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பழைய படி குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.ஜெகதீசன் கூறியது:  டெல்டா மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சத்திர நிர்வாகம் மற்றும் கோயில், ஆதீனத்துக்கு சொந்தமான இடங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முன்பு பயிர்க் காப்பீடு செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளதால், விவசாயிகள் இனிமேல் வருவாய்த் துறையினரிடம் சான்று பெற்று காப்பீடு செய்ய காலதாமதம் ஆகும். எனவே, காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து