முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இடைநிற்றல் இல்லாத மாநிலம் தமிழ்நாடு என பெருமிதம்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      தமிழகம்
Udhayanidhi 2024-11-25

Source: provided

சென்னை: துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் தொடக்கக் கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான் என்றும் அவர் கூறினார். பணி நியமன ஆணைகளை பெற்ற ஆசிரியர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து, 6 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான "திறன்" இயக்கத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்களை துணை முதல்வர்  வெளியிட்டார். மேலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குக் கணினிசார் அடிப்படை அறிவியலையும், செயற்கை நுண்ணறிவுத் திறன் மற்றும் அதனைப் பயன்படுத்தும் நுட்ப அறிவியலையும் கற்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்ட பாடநூல்களையும் வெளியிட்டார்.

இதன் பின்னர் நிகழ்ச்சியில் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது.,"ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 457 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றன். அதோடு சேர்த்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக 'திறன்' மற்றும் டிஎன் ஸ்பார்க் ஆகிய இரண்டு முக்கியமான முன்னெடுப்புகளையும் இங்கே தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

எனக்கு எப்பவுமே ஆசிரியர்களைப் பார்த்தாலே கொஞ்சம் பதற்றம் வந்துவிடும். ஒன்றிரண்டு ஆசிரியர்களை பார்த்தாலே பதற்றம் வந்து விடும். இன்றைக்கு இத்தனை ஆசிரியர்கள், 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் வந்து இருக்கிறீர்கள். எனவே உங்களைப் பார்க்கும்போது கொஞ்சம் பதற்றம் அதிகமாகவே இருக்கிறது. இருந்தாலும், உங்களை எல்லாம் இன்றைக்கு ஒரே இடத்தில் பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கின்றது.

தொடக்கக் கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான். அதற்கு காரணமும் வந்திருக்கக்கூடிய ஆசிரியர்கள் நீங்கள் தான். இதனை நான் சும்மா சொல்லவில்லை. மத்திய அரசினுடைய புள்ளிவிவரங்கள் இதை சொல்கின்றன. அத்தகைய சிறப்புமிக்க கல்வித்துறையில் பணியேற்கக்கூடிய உங்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். ஊர்கூடி இழுக்க வேண்டிய அந்த கல்வி எனும் தேருக்கு தொடக்கக் கல்வி ஆசிரியர்களாகிய நீங்கள்தான் அச்சாணி.  இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக விழாவில் பங்கேற்க முடியாதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பாதவது.,  இந்த இனிய விழாவில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர்களுக்கு நானே நேரில் பணிநியமன ஆணைகள் வழங்கவேண்டும் என ஆவலாக இருந்தேன். ஆனால், சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவர்கள் ஓய்வெடுக்குமாறு கூறிய அறிவுரையின் காரணமாக, இந்த விழாவில் பங்கேற்க இயலாமல் போனது வருத்தமளிக்கிறது. நிகழ்ச்சிக்கு நேரில் வர இயலாமல் போனாலும் எனது எண்ணமெல்லாம் உங்களைக் குறித்தே உள்ளது.

பிற்போக்குத்தனமான, அறிவியல் அணுகுமுறைகளுக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்க மறுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அத்தகைய நெருக்கடிக்கு இடையிலும், பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான பல புதுமையான திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆசிரியப் பெருமக்களின் தேவைகளை உணர்ந்த அரசு இந்த அரசு. மாணவர் நலனையும், ஆசிரியர் நலனையும் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை இரண்டு கண்களெனப் போற்றிச் செயலாற்றி வருகிறது. பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இன்னும் வளரும், தொடரும் என்று கூறி, புதிதாக பணியேற்கும் இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து