முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.பி.எஸ். சுற்றுப்பயணத்தில் மாற்றம்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      தமிழகம்
EPS 2024-08-27

Source: provided

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொடா் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தொடா் சுற்றுப்பயணத்தை கடந்த ஜூலை 7-ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்டு வருகிறாா். ஆக. 8-ஆம் தேதி வரை அவரது சுற்றுப்பயண விவரம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜூலை 26-ம் அவா் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை 29-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 29இல் சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை ஆகிய தொகுதிகளில் அவா் சுற்றுப்பயணம் மேற்கொள்வாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து