முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல்: இந்தியாவுக்கு 77-வது இடம்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      இந்தியா
Air-India 1

Source: provided

டெல்லி: உலகின் வலிமையான பாஸ்போர்ட்டு பட்டியலில் இந்தியாவுக்கு 77-வது இடம் கிடைத்துள்ளது. வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து உலகளவில் முதலிடத்தில் உள்ளது. 

2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் சமீபத்திய பட்டியலில் இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆறு மாதங்களில் எந்த நாடும் கண்டிராத மிகப்பெரிய முன்னேற்றமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா 85வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

லண்டனை தளமாகக் கொண்ட ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு, ஒரு நாட்டின் பாஸ்போர்ட் அதன் குடிமக்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும் நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகளவில் தரவரிசைப்படுத்துகிறது. தற்போது, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வந்தவுடன் விசா பெறும் வசதியுடன் பயணிக்க முடியும். இந்தியர்கள், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, பூட்டான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். 

வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து உலகளவில் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் உடன் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் உடன், விசா இல்லாமல் 189 நாடுகளுக்குள் நுழையலாம். இந்த முறை முன்னணியில் இருந்த அமெரிக்கா 10வது இடத்திற்கும், இங்கிலாந்து 6வது இடத்திற்கும் சரிந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து