முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயத்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து ரிஷப் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவு

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      விளையாட்டு
Rishabh-Pant--------

Source: provided

மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாதத்தில் அடி வாங்கிய ரிஷப் பந்த் எலும்பு முறிவு காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.  இந்திய அணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

எலும்பு முறிவு... 

கடந்த டெஸ்ட்டில் கையில் அடிபட்டு ஆட முடியாமல் ரிஷப் பந்த்  தவித்தார். இந்த டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் வீசிய ஃபுல் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆடும் முனைப்புடன் வலது பாதத்தில் சரியான அடி வாங்கி ரத்தம் கொட்டியதோடு கால் உடனேயே பெரிய வீக்கம் கண்டது. இந்நிலையில், ஸ்கேன் எடுத்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவர, இந்தத் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கேப்டன்கள் கோபம்...

இங்கு தான் தோனி போன்ற கேப்டன்கள் கடும் கோபத்துக்கு ஆளாவார்கள். ஏனெனில், காயமடைந்தால் நிச்சயம் பதிலி வீரர் அவரை அத்தனை விதத்திலும் இடமாற்றம் செய்ய முடியாது என்பதுதான் கிரிக்கெட்டின் வரலாற்று உண்மை. ரிஷப் பந்த்  உண்மையில் நன்றாக ஆடிவந்தார். பொறுமையுடன் பொறுப்பாக ஆடினார். திடீரென அவர் மனதுக்குள் பூதம் புகுந்து விடுகிறது ஒன்று ரேம்ப் ஷாட் ஆடுகிறேன் என்று கீழே விழுகிறார், இல்லையெனில் ஸ்லாக் ஸ்வீப் ஆடுகிறேன் என்று ஆடுகிறார். ரிவர்ஸ் ஷாட் ஆடி ஏற்கெனவே ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் பீட்டன் ஆகியிருந்தார்.

பொறுப்புணர்வு... 

அங்குதான் ஈகோவை விட வேண்டும். இன்றைக்கு மாட்டவில்லை என்றால், அந்த ஷாட்டுடன் மோதிக் கொண்டிருக்கக் கூடாது, எப்படியும் ஆடியே தீருவேன், அந்த ஷாட்டை கனெக்ட் செய்தே தீருவேன் என்று ஒருவித ஈகோ வந்து விட்டது ரிஷப் பந்த்துக்கு, அதற்குக் கொடுத்தவிலை 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாத நிலை. ஏற்கெனவே ஏகப்பட்ட காயங்களினால் தவித்து வரும் இந்திய அணிக்கு நாமும் சுமையாக மாறக் கூடாது என்ற பொறுப்புணர்வு எந்த ஒரு வீரருக்கும் வேண்டும்.

ஈகோ பிரச்சினை...

அந்தப் பந்தை அப்படி ஆட வேண்டிய அவசியம், அந்தத் தருணத்தில் அது தேவைப்படாத ஒரு ஷாட், ஒன்றுமில்லாத ஒரு நேர் புல்டாஸில் மட்டையில் பட்டுப் பாதத்தைத் தாக்கியது. நேர்மறையான ஒரு ஷாட்டை ஆடியிருந்தால் அது பவுண்டரிக்குக் கூட சென்றிருக்கலாம். இதுதான் பிரச்சினை, அந்த ஷாட்டை ஆடியே தீருவேன், கனெக்ட் செய்தே ஆக வேண்டும் என்று முன் கூட்டியே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது இப்படிப்பட்ட முடிவில் தான் கொண்டு விடும்.

இஷான் கிஷன்... 

இதனால் அவரது சொந்த கரியரும் பாதிக்கப்படுவதோடு, இந்திய அணியையும் கைவிட்டு விட்டார் ரிஷப் பந்த். சிந்திக்காமல் செய்த தவற்றினால் அவர் இப்போது 7-8 வாரங்களுக்கு கிரிக்கெட் ஆட முடியாது. இத்தனைக்கும் இந்திய அணியின் வைஸ் கேப்டன் ரிஷப் பந்த். அவருக்கு இன்னும் கூடுதல் பொறுப்புணர்வு தேவை என்பதே இந்தக் காயம் காட்டும் உண்மை. இப்போது, ஒருவேளை இஷான் கிஷன் மாற்று வீரராக தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

பி.சி.சி.ஐ. அறிக்கை...

முன்னதாக. ரிஷப் பண்டின் காயம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) வெளியிட்டிருந்த அறிவிப்பில், ரிஷப் பண்ட், போட்டியின் மீதமுள்ள நாட்களில் விக்கெட் கீப்பிங் பணிகளைச் செய்ய மாட்டார். துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பராகப் பொறுப்பேற்பார். காயம் இருந்தபோதிலும், ரிஷப் பண்ட் அணியுடன் இணைந்துள்ளார். மேலும் தேவைப்பட்டால் அவர் பேட்டிங் செய்வார்" என்று  தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து