Idhayam Matrimony

அடுத்து வரும் 20 ஆண்டுகளும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்கும்: அமித்ஷா

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      இந்தியா
amit-shah 1

Source: provided

புதுடில்லி : அடுத்த 20 ஆண்டுகள் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகதான் இருக்கும் என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கத்தை தொடர்ந்து, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பேசி வருகின்றனர். அப்போது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரது சீனப் பயணம் குறித்து பேசினார். ”படை பின்வாங்கல், வர்த்தக கட்டுப்பாடுகள், பயங்கரவாதம் குறித்து பேசுவதற்காகதான் சென்றேன். ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட செல்லவில்லை” எனத் தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா குறுக்கிட்டு பேசியதாவது, “எதிர்க்கட்சியினருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், வேறு சில நாடுகள் மீது நம்பிக்கை இருப்பது என்பதில் எனக்கு ஆட்சேபனை உள்ளது. அவர்களின் கட்சியில் அந்நியர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அவர்கள் கட்சியின் அனைத்து விஷயங்களையும் இந்த அவையிலும் திணிக்கக் கூடாது.

அதனால் தான் அவர்கள் எதிர்க்கட்சி பகுதியிலேயே அமர்ந்திருக்கிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்கு அங்கேயேதான் அமர்ந்திருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து