எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாங்காக் : தாய்லாந்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆசியாவில் அமைந்துள்ள தாய்லாந்து உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பங்சு மாவட்டம் சடுசங் பகுதியில் காய்கறி சந்தை உள்ளது.
இந்நிலையில், இந்த சந்தைப்பகுதிக்கு நேற்று துப்பாக்கியுடன் வந்த நபர் அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவலளர்களை சரமாரியாக சுட்டார். மேலும், அங்கிருந்த ஒரு பெண்ணையும் சுட்டார். இந்த சம்பவத்தில் காவலர்கள் 4 பேர், ஒரு பெண் என 5 பேர் உயிரிழந்தனர். இதன்பின்னர், துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் யார்? துப்பாக்கி சூட்டிற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையே எல்லை விவகாரத்தில் கடந்த சில நாட்களாக மோதல் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


