முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் ஆடி பெருக்கை முன்னிட்டு நீர் நிலைகளில் குவிந்த மக்கள் : புனித நீராடி வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Aadi 2025-08-02

Source: provided

மதுரை : ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி வழிபாடு செய்து கோலாகலமாக கொண்டாடினர்.

ஆடிப் பெருக்கு தினத்தில் செய்யக்கூடிய எந்தவொரு நல்ல செயலுக்கும் புண்ணியம் பெருகும். விவசாயிகள் இந்த தினத்தில் விதைகளை விதைப்பார்கள். இந்நாளில் விதைத்தால் விளைச்சல் பெரும் என்பது ஐதீகம். ஆடி 18 அன்று மகா லட்சுமியை வழிபட்டு செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். மக்கள், குறிப்பாக புது மணத்தம்பதிகள் ஆற்றங்கரைக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் படையலிட்டு, காவிரி அன்னையை பெண்கள் வழிப்பட்டனர். புதிய மஞ்சள் கயிறு மாற்றி கொண்டனர். இது போல் மேட்டூர், திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரைகளில் மக்கள் பூஜை செய்தனர். தம்பதிகள் மஞ்சள் கயிறு , புது தாலி மாற்றி கொண்டனர். அரிசி, பழம், பால் என படையலிட்டு பூஜை நடத்தினர்.

மதுரை மாவட்டத்தில், பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்து கோலாகலமாக கொண்டாடினர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாலி பெருக்கி கட்டி புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடு செய்தனர். ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டினர். ஆடிப்பெருக்கு பண்டிகையை, தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களிலும், சிலர் கடற்கரையிலும் கொண்டாடினர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், ஆடிப்பெருக்கு விழாவை, ஏராளமான மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். மாவட்டத்தில், காவிரிக்கரை அமைந்துள்ள மோகனூர், ப.வேலூர், ஜேடர்பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பெண்கள் கருகமணி வைத்து, கன்னிமார் சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர். மாலை, ஆற்றில் நவதானியங்களால் ஆன முளைப்பாரி விடும் நிகழ்ச்சி நடந்தது.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் பெண்கள், படையலிட்டுசிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதமாக போற்றப்படுகிறது. ஆடி மாதம் அன்று பெண்கள் நதிக்கரையில் அம்மனுக்கு படையிட்டு வணங்குகின்றனர்.  காவிரியில் நடப்பதைப்போலவே நெல்லையிலும் தீராநதி தாமிரபரணிக்கரையில் ஆடிப்பெருக்கு நெல்லை குறுக்குத்துறையில் தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமிகோயில் படித்துறையில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். 

திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், திருமணமான பெண்களுக்கு தாலிபாக்கியம் நிலைக்கவும், விவசாயிகளுக்கு மகசூல் பெருகி வாழ்வு செழிக்கவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் ஆடிப்பெருக்கு அன்று வழிபடுகிறார்கள். பல வகையான பொருட்களை வைத்தும் படைத்தனர். பெண்கள் தாலிச்சரடை மாற்றிக் கொண்டனர். ஆடிப்பெருக்கையொட்டி தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் பல்வேறு இடங்களிலும் இந்த வழிபாடு நடந்தது.

கடலூர் பகுதியை சேர்ந்த புதுமண தம்பதிகள், பொது மக்கள் ஏராளமானோர் கடலூர் சில்வர் கடற்கரையில் கூடினர். வாழை இலையில் அரிசி, வெல்லம், பொறி, பழங்களை வைத்து இயற்கையை வழிபட்டனர். பின்னர் சுமங்கலி பெண்கள் புதிதாக தாலி கயிறுகளை மாற்றினர். புதுமண தம்பதிகள் இயற்கையை வழிபட்டு தங்கள் திருமண மாலைகளை நீரில் விட்டனர்.

இதே போல் தென்பெண்ணை ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆற்றில் புதுமணத் தம்பதியினர் வந்து, படையிலிட்டும் வழிபாட்டில் ஈடுபட்டு திருமண மாலையை ஆற்றில் விட்டனர். இது போல சிதம்பரம் அருகே வல்லம் படுகை கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் புதுமண தம்பதியினர் பொதுமக்கள் குவிந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து