Idhayam Matrimony

கவின் கொலை வழக்கு: 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

மதுரை, கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ்.  கடந்த 27ம் தேதி திருநெல்வேலி கே.டி.சி. நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித்,  அவரது தந்தை  சரவணன்  செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கவின் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த காந்திமதி நாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், கவின் கொலை வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட நீதிபதி கண்காணிப்பில் நடைபெறவும், கவின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், காதல் விவகாரத்தில் கொலைகள் நடைபெறுவதை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில்  கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான்,  மனுதாரர் தரப்பில்  வழக்கறிஞர் ஐ.பினேகாஸ் ஆகியோர் வாதிட்டனர்.

இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பாரபட்சம் இல்லாமலும், ஒருதலை பட்சமாக இல்லாமலும் நடைபெற வேண்டும். காதல் விவகாரக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வருவது தொடர்பாக இறுதி விசாரணையின் போது முடிவெடுக்கப்படும்” என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து