எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஓவல்: சாதனையை முகமது சிராஜ் சமன் செய்துள்ளார்.
த்ரில் வெற்றி...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
சிராஜ் 5 விக்கெட்...
374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
சாதனை சமன்...
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை முகமது சிராஜ் சமன் செய்துள்ளார். கடந்த 2021-22 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பும்ராவின் இந்த சாதனையை முகமது சிராஜ் தற்போது சமன் செய்துள்ளார்.
அதிக விக்கெட்டுகள்...
இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர்கள்
23 விக்கெட்டுகள்- ஜஸ்பிரித் பும்ரா, 2021-22
23 விக்கெட்டுகள் - முகமது சிராஜ், 2025
19 விக்கெட்டுகள் - புவனேஸ்வர் குமார், 2014
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


