முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆணவக்கொலைகளை தடுக்க சட்டம்: திருமாவளவன் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Thirumavalavan 2024 09 14

திருச்சி, ஆணவக்கொலைகளை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி வருகிற 9, 11 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- நெல்லையில் நடந்த சம்பவம் போன்று தமிழகத்தில் பல பகுதிகள் மற்றும் மாநிலங்களிலும் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் வலியுறுத்தி வருகிறோம். பாராளுமன்றத்தில் இது குறித்து பேசியும், உள்துறை அமைச்சருக்கு கடிதமும் எழுதி உள்ளோம்.

உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் இதுபோன்ற கொலைகளை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை வலியுறுத்தி தீர்ப்பளித்துள்ளது.  இச்சூழலில் இச்சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கும் பொறுப்பு, அதிகாரம் உள்ளது. முதல்வர் இது குறித்து ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் சட்டம் இயற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுகிறோம். இதை வலியுறுத்தி வருகிற 9, 11 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் 9-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்.  

தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் கூட்டணியாகவே உருவாகவில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய 2 கட்சிகள் இணைந்து இருக்கிறது, அவ்வளவுதான். அவர்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. வட மாநிலத்தவர்கள் லட்சக்கணக்கில் தொழிலாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிற சூழலில் அவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக வருவதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளது. இது குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து