எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துாத்துக்குடி: முதலீட்டாளர்களை ஈர்க்க தூத்துக்குடியில் நடந்த தொழில் துறை மாநாட்டில், ரூ.32,554 கோடி முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. மேலும் ரூ.2,530 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
41 நிறுவனங்களுடன்...
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். மாநாட்டில் தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 32,444 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும். 49,845 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், நிகழ்ச்சியின்போது 3,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 2,530 கோடி ரூபாய் மதிப்பில் 5 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
ரூ.16,000 கோடியில்...
துாத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் சிப் காட் பகுதியில், வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. தூத்துக்குடியில் நேற்று (ஆகஸ்ட் 04) ரூ.16,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தூத்துக்குடி வின்பாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆலையில் முதற்கட்டமாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
40 சதவீதம் உற்பத்தி...
இந்த தொழிற்சாலை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவில் மின் வாகன உற்பத்தியின் தலைநகர் தமிழகம் தான் என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்வேன். நாட்டின் ஒட்டுமொத்த மின்சார வாகனங்கள் உற்பத்தியில் 40 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி ஆகிறது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் ஆலைக்கு நான் அடிக்கல் நாட்டிய 17 மாதங்களில் தமிழகத்தில் நிறுவனத்தை தொடங்கி பெருமை சேர்த்துள்ளார்கள். வியட்நாம் என்றாலே வியப்பு தான். தென் மாவட்டங்கள் தொழில் பகுதியாக உருவாகும்.
பெண்களுக்கு வேலை...
முதல்கட்டமாக, இதுவரை ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு 50 ஆயிரம் மின் வாகன எஸ்.யு.வி. உற்பத்தியாக இருக்கிறது. தெற்காசியாவிலேயே, வியட்நாமிற்கு வெளியில், இந்த நிறுவனம் தொடங்கியிருக்கும் முதல் மின்வாகன உற்பத்தித் திட்டம் இதுதான்! தமிழ்நாட்டில், அதுவும் நம்முடைய தூத்துக்குடியில் இருக்கும் இந்த ஆலைதான், இந்தியாவிலேயே முழு மின்சார பயணிகள் வாகன உற்பத்தி திட்டம்! இதனால், இந்த வட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


