Idhayam Matrimony

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஈரானில் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பு

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      உலகம்
Israel

Source: provided

இஸ்ரேல்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலை ஈரான் அமைத்துள்ளது.

இஸ்ரேல் கடந்த ஜூன் மாதம் கடுமையான தாக்குதல் நடத்திய நிலையில், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்காக ஈரான் உச்சமட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலை நிறுவியுள்ளது. இந்த உச்சமட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில், ஈரான் நாட்டின் உயர்ந்த பாதுகாப்பு அமைப்பாக கருதப்படும். ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியன் தலைமையில் இந்த கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கவுன்சில் பாதுகாப்பு திட்டம், ஈரான் அயுதப்படைகளின் திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளை கையாளும். பாராளுமன்ற சபாநாயகர், தலைமை நீதிபதி, ராணுவப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் இதன் தொடர்பான அமைச்சர்கள் இதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட இருக்கிறார்கள். கடந்து ஜூன் மாதம் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த போரில் ஈரானில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ராணுவத் தளபதி மற்றும் கமாண்டர்ஸ் ஆகியோரும் அடங்குவர். 1980-ம் ஆண்டு ஈரானுக்கும், ஈராக்கிற்கும் இடையில் நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது இது போன்று பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து