முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெட் பிளவர் திரை விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      சினிமா
Red Flower 2025-08-12

Source: provided

கதை 2047 ல் நடக்கிறது. மூன்றாவது உலகப் போர் முடிவடைந்து, உலக நாடுகள் பலவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராணுவ கூட்டமைப்பு ஒன்று இந்தியாவையும் குறிவைக்கிறது. அதன் செயல்பாடுகளை முறியடிப்பதற்காக உளவுத்துறை அதிகாரி நாயகன் விக்னேஷ் மூலம் இந்திய அரசு ஆபரேஷன் ‘ரெட் பிளவர்’-ரை கையில் எடுக்கிறது. ரெட் பிளவரின் செயல்பாடுகள் என்னென்ன  என்பதை முழுக்க கிராபிக்ஸ் பின்னணியில் சொல்வதே ‘ரெட் பிளவர்’ படம். .நாயகன் மற்றும் வில்லன் என்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் விக்னேஷ், மாறுபட்ட வேடங்களில் ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வருகிறார். நாயகி மணிஷா ஜெஷ்னானி, கவர்ச்சியில் கிரங்கடிக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன், நாசர், தலைவாசல் விஜய் ஆகியோரது அனுப நடிப்பு படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது. தேவ சூர்யாவின் ஒளிப்பதிவும் சந்தோஷ் ராமின் இசையும் ஓகே ரகம். எழுதி இயக்கியிருக்கும் ஆண்ட்ரூ பாண்டியன், கதைக்கருவில் தொலைநோக்கு பார்வை வைத்தது போல அதை காட்சி மொழியிலும் கொடுத்து இருந்தால் இந்த சிவந்த பூ  மனம் வீசியிருக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து