Idhayam Matrimony

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழுவின் அறிக்கை: காலக்கெடுவை நீட்டித்தது மக்களவை

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      இந்தியா
Parliament-2024-11-27

Source: provided

புதுடெல்லி : ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்த பாராளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டின் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே காலகட்டத்தில் நடத்தி முடிக்கும் நோக்கில் அரசியலமைப்பு திருத்த (129வது திருத்த) மசோதா 2024, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா 2024 ஆகிய இரண்டு மசோதாக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாக்கள் பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பி.பி. சவுத்ரி தலைமையிலான குழு, மசோதாக்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், இவ்விரண்டு மசோதாக்கள் மீதான அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் அளிக்குமாறு பாராளுமன்ற மக்களவையில் கோரிக்கை வைத்தார். இது தொடர்பான தீர்மானம் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. "அரசியலமைப்பு (129வது திருத்த) மசோதா 2024, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2024 ஆகியவற்றின் மீது பாராளுமன்றக் கூட்டுக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டில் வர உள்ள குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று பி.பி. சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து