எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டெல்லியில் வருகிற 24-ம் தேதி சபாநாயகர் மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைக்கிறார்.
வருகிற 24-ம் தேதி டெல்லி சட்டப்பேரவையில் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைப்பார் என்று டெல்லி சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
32 சபாநாயகர்கள் மற்றும் துணை சபாநாயகர்கள், மேலவை, கீழவை தலைவர்கள், துணைத்தலைவர்கள் என இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர். இந்தியாவில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதல்முறை. வருகிற 24-ம் தேதி தொடக்க அமர்வு நடைபெறும். இந்த மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.நிறைவு விழா 25-ம் தேதி நடைபெறும். மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தமாநாட்டில் டெல்லி எம்.பி.க்கள், முதல்-மந்திரி ரேகா குப்தா, கேபினட் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


