முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்: இ.பி.எஸ்.

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2025      தமிழகம்      அரசியல்
EPS-1-2025-08-9

சாத்தூர், தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

விருதுநகர் சட்டமன்றத் தொகுதிகளில் எழுச்சிப்பயணத்தில் மக்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தபடியாக அருப்புக்கோட்டை தொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:

 அருப்புக்கோட்டை என்றாலே புரட்சித்தலைவர், பொன்மனச்செல்வன் எம்.ஜி.ஆர். ஞாபகம் வரும், எம்.ஜி.ஆர். நின்ற தொகுதி இது. விவசாயிகளுக்கு குடிமராமத்து திட்டம் கொண்டுவந்தோம், இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம், பேரிடர் பயிர்க்காப்பீடு மூலம் இழப்பீடு, பேரிடர் நிவாரணம். அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவர் ஆக 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கொடுத்து 2,818 பேர் இலவசமாக படித்து இன்று மருத்துவர் ஆகியுள்ளனர்.  

கிராம மக்கள் ஊரிலேயே சிகிச்சை பெற அம்மா மினி கிளினிக் கொண்டுவந்தோம்.  ஆனால் இதனை  தி.மு.க. அரசு மூடிவிட்டது. மீண்டும் ஆட்சி அமையும்போது இந்தத் திட்டம் தொடரும். இதேபோல் தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை திட்டம் எல்லாம் நிறுத்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்தையும் ரத்துசெய்துவிட்டனர். அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும்.

 மதுக்கடையில் 10 ரூபாய் அதிக வசூல் செய்து, அது மேலிடத்துக்கு போகிறதாம். வருடத்துக்கு 5,400 கோடியும், நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், சமூகநல விடுதியில் தரமில்லாத உணவு கொடுக்கிறார்கள், கிச்சடியை பாயாசம் போன்று ஊற்றுகிறார்கள்.

 அ.தி.மு.க. ஆட்சியில் அருப்புக்கோட்டையில், ஆண்கள் பெண்கள் கலைக் கல்லூரி, வட்டார போக்குவரத்து அலுவலகம், மகளிர் காவல்நிலையம், கூட்டுக்குடிநீர் திட்டம், 200 பசுமை வீடுகள், பாலங்கள், பள்ளிகள் தரம் உயர்த்தல், புறவழிச்சாலை திட்டம் போன்றவை செய்துகொடுத்தோம். நீங்கள் கொடுத்திருக்கும் கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும்.  

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து