Idhayam Matrimony

இந்தியா சிந்து நதியின் குறுக்கே அணை கட்டினால் தகர்ப்போம் : பாகிஸ்தான் ராணுவ தளபதி மிரட்டல்

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2025      உலகம்
Indus-River

வாஷிங்டன், சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம் என்று பாக்கிஸ்தான் ராணுவ தளபதி பேசினார்.

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டட்டும் என்றுதான் நாங்கள் காத்திருக்கிறோம். அணை கட்டினால், 10 ஏவுகணைகளால் அதை அழிப்போம். சிந்து நதி இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல. எங்களிடம் ஆயுதப் பற்றாக்குறை ஏதுமில்லை என்றார்.

மேலும், எதிர்காலத்தில் 'இந்தியாவிடமிருந்து அச்சுறுத்தல் உலகின் பாதி நாடுகளை அழித்துவிடுவோம் என்ற தொனியிலும் பாகிஸ்தான் ராணுவ தளபதி பேசியுள்ளார். ஏற்கனவே வரிவிதிப்பால் இந்தியா - அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில் அமெரிக்க மண்ணில் இருந்தவாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் தளபதி மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்த இந்தியா, அந்த நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் அரண்டு போன பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஏதிராக ஆத்திரமூட்டும் வகையில் கருத்துகளை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து