முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. 2-வது மாநில மாநாடு: பாரபத்தியில் குடிநீர் மேலாண்மைக்குழு அமைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Vijay 2024-11-25

Source: provided

மதுரை: தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டையொட்டி மதுரை பாரபத்தியில் குடிநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

200 அடி நீளமும், 60 அடி அகலம் கொண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. த.வெ.க. தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடையும் அமைக்கப்படுகிறது. மாநாடு மாலை 3.15 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாட்டுக்காக குடிநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி மாநாட்டில் குடிநீர் கிடைக்காமல் தொண்டர்கள் சிரமப்பட்டனர் . இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து