எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: சீமை கருவேல மரங்கள் அகற்றும் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று ஐகோர்ட் நீதபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், தற்போது வரை 713 கிராமங்களில் மட்டும் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்ட கிராமங்கள், மாவட்டங்களின் விவரங்கள் இல்லாததால் தமிழக அரசின் அறிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், முறையாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு ஆகஸ்ட் 29-ந்தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


