Idhayam Matrimony

அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தை: புதினிடம், மெலனியாவின் கடிதத்தை வழங்கிய ட்ரம்ப்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      உலகம்
Puthin 2025-08-17

Source: provided

அமெரிக்கா : அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்

இதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரஷ்ய அதிபர் புதின், எங்களுக்கு இடையே நடந்த போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.

பின்னர் பேசிய ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இன்னும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என தெரிவித்தார். மேலும், ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளும் இதில் சிறிது தலையிட வேண்டும். ஆனால் முக்கிய பொறுப்பு ஜெலென்ஸ்கியிடம் உள்ளது என்று கூறினார். இதனிடையே அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தையின்போது புதினிடம் ட்ரம்ப் தனது மனைவி மெலனியா எழுதிய கடிதத்தை வழங்கினார். அதில் உக்ரைனில் போரால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பற்றி பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அக்கடிதத்தில், புவியியல், அரசாங்கம் மற்றும் சித்தாந்தத்திற்கு மேலே நிற்கும் ஒரு அப்பாவித்தனம் கொண்ட குழந்தைகளை பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மோதலில் சிக்கிய குழந்தைகளின் மெல்லிசை சிரிப்பை உங்களால் மீட்டெடுக்க முடியும். இந்த குழந்தைகளின் அப்பாவித்தனத்தைப் பாதுகாப்பதில், நீங்கள் ரஷ்யாவிற்கு மட்டும் சேவை செய்வதை விட அதிகமாகச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த குழந்தைகளுக்கு நீங்கள் பேனாவால் கையெழுத்திடுவது மூலம் உதவ முடியும்" என்று மெலனியா தெரிவித்தார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து