முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்று வீரருக்கு அனுமதி அளித்த இந்திய கிரிக்கெட் போர்டு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
57

Source: provided

ஆமதாபாத்: உள்ளூர் போட்டிகளில் கடும் காயம் அடைந்தவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க பி.சி.சி.ஐ., அனுமதித்துள்ளது.

சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது, நான்காவது போட்டியில் இந்தியாவின் ரிஷாப் பன்ட்டிற்கு வலது கால் பாத விரல் எலும்பில் முறிவு ஏற்பட்டது. வலியுடன் துணிச்சலாக களமிறங்கி 'பேட்' செய்தார். இதே போல ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து வீரர் வோக்சின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரும் கடைசி நாள் ஆட்டத்தில் வலியுடன் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.

காம்பிர் ஆதரவு: இத்தகைய சூழலில் கடுமையாக காயம் அடைந்த வீரருக்கு பதிலாக மாற்று வீரரை அனுமதிக்க வேண்டுமென இந்திய பயிற்சியாளர் காம்பிர் வலியுறுத்தினார். இதற்கு இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது 'ஹெல்மெட்டில்' பந்து தாக்கி, மூளை அதிர்வு ஏற்படுபவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறங்க அனுமதி உண்டு. காயம் அடைந்தவர்களுக்கும் அனுமதி அளிப்பது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஆலோசித்து வருகிறது.

ஐ.சி.சி.,க்கு முன்பாக மாற்று வீரருக்கு அனுமதி அளித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) புரட்சி செய்துள்ளது. இனி உள்ளூர் போட்டியின் போது கடுமையாக காயம் அடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்கலாம். இது ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, சி.கே.நாயுடு டிராபி (23 வயதுக்கு உட்பட்ட) போன்ற முதல் தர போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே டிராபி உள்ளிட்ட 'ஒயிட் பால்' போட்டிகளுக்கு பொருந்தாது. பிரிமியர் தொடரில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது. இதன் விதிமுறை பற்றி ஆமதாபாத்தில் நடக்கும் கருத்தரங்கில் அம்பயர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

 புதிய விதிமுறைப்படி மைதானத்திற்குள் போட்டி நடக்கும் நேரத்தில் சம்பந்தப்பட்ட வீரர் கடுமையாக காயம் அடைந்திருக்க வேண்டும். வெளிப்புற காயம், எலும்பு முறிவு, வெட்டு காயம், எலும்பு விலகுதல் போன்றவை காரணமாக எஞ்சிய போட்டியில் விளையாட முடியாத நிலையில் இருக்க வேண்டும்.

காயத்தின் தன்மை பற்றி களத்தில் இருக்கும் அம்பயர்கள் முடிவு எடுப்பர். இவர்கள் பி.சி.சி.ஐ., 'மேட்ச் ரெப்ரி' அல்லது மைதானத்தில் உள்ள டாக்டரிடம் ஆலோசனை நடத்தலாம். 'மேட்ச் ரெப்ரி' எடுக்கும் முடிவே இறுதியானது. இதை எதிர்த்து 'அப்பீல்' செய்ய முடியாது.அணி மானேஜர் மாற்று வீரர் தேவை என முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். பவுலர் என்றால் பவுலர், பேட்டர் என்றால் பேட்டர் என்ற முறையில் மாற்று வீரரை தேர்வு செய்யலாம். 'டாஸ்' நிகழ்வின் போது மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். இந்த பட்டியலில் விக்கெட்கீப்பர் இல்லாத பட்சத்தில் அணியில் இருந்து வேறு ஒரு விக்கெட்கீப்பரை தேர்வு செய்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து