எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது த.வெ.க. மாநாடு, அமித்ஷாவின் வருகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
எந்த தாக்கத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாம் பாகம் தொடரும், மூன்றாம் பாகம் தொடரும். அது பொன்னியின் செல்வனைப் போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
அமித்ஷாவால் தமிழகத்திற்கு வந்து எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது. தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கவே அவர்கள் தடுமாறுகிறார்கள். எனவே அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை.போலி வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.அசல் வாக்காளர்கள் தங்கள் அசல் வாக்குகளை செலுத்தினாலே போதும். எங்களுக்கு போலி வாக்காளர்கள் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


