முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு தன்னால் மீண்டும் தேர்வாக முடியும் - புஜாரா நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      விளையாட்டு      தேர்தல்
55

Source: provided

புதுடெல்லி: இந்திய அணிக்கு தன்னால் மீண்டும் தேர்வாக முடியும்  என்று கிரிக்கெட் வீரர் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போது சிவப்பு பந்து வடிவத்தில் (டெஸ்ட் கிரிக்கெட்) உள்நாடு மற்றும் கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய போதும் புஜாராவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாகவே கூறப்படுகிறது.

புஜாரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இந்த அளவில் இருக்க, இந்திய அணிக்கு தன்னால் மீண்டும் தேர்வாக முடியும் என நம்புகிறார். இதற்காக தேர்வுக்குழு தன்னை அழைக்கும் பொழுது, தான் முழு அளவில் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து விளையாடி வருவதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார்? கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்க கூடிய வீரராக யார் இருப்பார்? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இந்த இரண்டு கேள்விகளுக்கும் இரண்டு இந்திய வீரர்களை புஜாரா தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த புஜாரா தன்னுடன் இணைந்து விளையாடிய, தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

மேலும் கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்க கூடிய திறமை வாய்ந்த வீரர் யார்? என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் கேப்டனுமான விராட் கோலியை தேர்ந்தெடுத்திருக்கிறார். அஸ்வின் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து