Idhayam Matrimony

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ஆடி களப பூஜை நிறைவு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Untitled-1

Source: provided

குமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் திருவாவடுதுறை ஆதீனம் திருக்கயிலாய பரம்பரை 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட தங்க குடத்தில் களபம் மற்றும் வாசனை திரவியங்கள் நிரப்பி அம்மனுக்கு களப அபிஷேகம் நடத்தப்பட்டது.

அதன்பிறகு தினமும் காலை 10 மணிக்கு களப பூஜை நடைபெற்து. வெள்ளிக்குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம், அக்கி, இக்கி, புனுகு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது.

அதன்பிறகு மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க வெள்ளி குடத்தை கோவில் மேல்சாந்திகள் ஊர்வலமாக எடுத்து வந்து, கருவறைக்குள் கொண்டு சென்று வெள்ளிக்குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த களப அபிஷேகத்தை மணலிக்கரைமாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ நடத்தினார்.

பின்னர் அம்மனுக்கு தங்க கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் நற்பணி சங்கத்தின் சார்பில் அன்னதானம் நடந்தது. இந்த அன்னதானத்தை கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க பொருளாளரும் கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலருமான வைகுண்டபெருமாள் தொடங்கி வைத்தார். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகமும் நடந்தது.

இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

தொடர்ந்து 12 நாட்கள்  நடைபெற்று வந்த களப பூஜை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பிரம்மாண்ட ஹோமம் நடந்தது. இதற்காக கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள தெற்கு மண்டபத்தில் கோவில் யாக குண்டம் அமைத்து பூஜையை நடத்தினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து