முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் கேம்களுடன் உறவை முறித்துக்கொள்கிறோம்- பி.சி.சி.ஐ. அறிவிப்பு

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

டெல்லி : ஆன்லைன் கேம்களுடன் உறவை முறித்துக்கொள்ள உள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் டீரிம் 11 மற்றும் எம்.பி.எல். ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ட்ரீம் 11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் டீரிம் 11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம். வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் பி.சி.சி.ஐ. உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது என பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து