Idhayam Matrimony

லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறும்: நேதன்யாகு

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2025      உலகம்
Nedanyagu 2024-12-10

இஸ்ரேல், லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறும் என்று நேதன்யாகு தெரிவித்தார்.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு லெபனானில் உள்ள ஆயுதமேந்திய குழு இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தை குவித்துள்ளது. ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் லெபனானை சேர்ந்த பலன் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் இந்த மாதம் தொடக்கத்தில் ஹிஸ்புல்லாவை ஆயுதம் இல்லாத குழுவாக்க லெபனான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையை லெபனான் ராணுவம் மேற்கொள்ள வேண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது. ராணுவம் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை பறிமுதல் செய்து வருகிறது. இந்த நிலையில் லெபனான் அமைச்சரவை முடிவை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை ஏந்தவில்லை என்றால், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் இருந்து வெளியேறும் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் லெபனானில் உள்ள ஐந்து மலைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து