முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு கன்னியாகுமரி எம்.பி. வாழ்த்து

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Kanyakumari-MP-2025-08-25

கன்னியாகுமரி, துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்தார்.

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம்  9-ந்தேதி நடைபெறுகிறது.

இதற்காக பா.ஜ.க. கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா கவர்னராக இருந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில் தமிழக எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக சுதர்சன் ரெட்டி நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவரை கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வரவேற்றனர். பின்னர் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டினார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை ஆகியோருடன் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி, துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு மற்றும் வாழ்த்தினை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து