எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : 2025 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஷகிப் அல் ஹசன் விளையாடி வருகிறார். இதில் செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஷகிப் அல் ஹசன் தனது அபாரமான பந்துவீச்சால் 2 ஓவர்களில் வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 5-வது பந்துவீச்சாளர் என்ற மைல்கல்லை ஷகிப் எட்டினார். அவரது 500-வது விக்கெட்டாக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்ட அவர், 18 பந்துகளில் 25 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த ஆல்-ரவுண்டர் திறனுக்காக அவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 7000+ ரன்கள் மற்றும் 500+ விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் மற்றும் ஒரே வீரர் என்ற மாபெரும் சாதனையை ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது வீரர் ஷகிப். இதற்கு முன் டுவைன் பிராவோ, ரஷீத் கான், சுனில் நரைன் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த மைல்கல்லை எட்டிய முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


