முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ.-யை விமர்சித்த முன்னாள் வீரர்

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Srikanth 2025-08-29

Source: provided

மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆகச்சிறந்த தடுப்பாட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர், புஜாரா. ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து ‘சுவர்’ என்று அழைக்கப்பட்ட புஜாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். கடைசியாக 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு இளம் வீரர்களின் வருகையால் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 2 ஆண்டுகள் ஒதுங்கி இருந்தாலும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். இடையில் வர்ணனையாளராகவும் பணியாற்றினார். இனி இந்திய அணியில் தனக்கும் மறுபிரவேச வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த புஜாரா கிரிக்கெட்டுக்கு ‘குட்பை’ சொல்லி உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஓய்வு பெற்ற விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் புஜாரா ஆகியோர் பேர்வெல் போட்டியில் விளையாடி விடை பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ஆனால் பெரும்பாலான ஜாம்பவான் வீரர்களை பேர்வெல் போட்டிகளை நடத்தாமல் மரியாதையின்றி பி.சி.சி.ஐ. அனுப்பியது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று அவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “உங்களுடைய நாட்டுக்காக நீங்கள் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் நிச்சயம் சிறந்த கிரிக்கெட்டர். அதனால் நீங்கள் நல்ல வழியில் வழியனுப்பப்பட வேண்டும். விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்ற போது தலைமை நிர்வாகத்திற்கும் அவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது என்று நம்புகிறேன். உண்மையில் அவர்களிடம் அவர்கள் பேசியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி செய்வது விளையாட்டுக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்லதல்ல.

விராட் கோலியின் ஓய்வும் இப்படித்தான் நடந்தது. அவரும் சிறந்த வழி அனுப்புதலுக்கு தகுதியானவர். அவரிடம் இன்னும் 2 வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் திறமை இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து தொடர் சமனில் முடிந்ததால் அந்தப் பேச்சுக்கள் நின்று போனது. இருப்பினும் விராட் கோலி போன்ற வீரரை இந்தியா கண்டறிவதற்கு சற்று காலமாகும்.

அதே போல நீண்ட காலமாக விளையாடாத புஜாராவிடம் ஓய்வு திட்டங்கள் குறித்து பேசியிருக்க வேண்டும். அந்த வீரரும் தனது நேரம் முடிந்ததை உணர்ந்து ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அது நடந்திருந்தால் புஜாரா சிறந்த முறையில் வழி அனுப்பப்பட்டிருப்பார். இவை அனைத்தும் பி.சி.சி.ஐ., தேர்வாளர்கள் மற்றும் வீரருக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை பொறுத்தது” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து