முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது தாயை அவமதித்து விட்டனர்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2025      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : என் தாயை மட்டும் அவமதிக்கவில்லை, நாட்டின் தாய்மார்களை அவமதித்து விட்டனர் என்று பிரதமர் மோடி வேதனையுடன் கூறியுள்ளார்.

பீகாரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் டெல்லி இருந்து காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:- ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தின்போது, எனது தாயை எதிர்க்கட்சிகள் அவமதித்து விட்டனர். 'இந்தியத் தாயை' அவமதிப்பவர்களுக்கு என் அம்மாவை திட்டுவது ஒரு பொருட்டே அல்ல, அத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். என் தாயை இழிவாகப் பேசிய போது, என் இதயம் எவ்வளவு காயமடைந்ததோ, அதைவிட பீகாரில் உள்ள பெண்கள், அதைக் கேட்டு எந்த அளவுக்கு வலியை சுமந்தீர்கள் என்று எனக்குத் தெரியும்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தையும் காங்கிரஸ் கட்சியையும் நான் மன்னித்துவிடுவேன், ஆனால், எனது தாயை இழிவாகப் பேசியவர்களை பீகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சி, பெண்களால்தான் கவிக்கப்பட்டது என்பதால், அக்கட்சி பெண்களை பழிவாங்குகிறது. எனது தாயை இழிவாகப் பேசியவர்களின் மனநிலையே, பெண்கள் என்றாலே பலவீனமானவர்கள் என்பதுதான்.

அரசியலுக்கும் எனது தாய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியிருக்கும்போது, ராஷ்ஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் நடத்திய வாக்காளர் அதிகார யாத்திரையில், எனது தாயைப் பற்றி பேச வேண்டியதன் அவசியம் என்ன? பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை காங்கிரஸ் எப்போதும் அவமதிக்கிறது. பெண்கள் மீதான இந்த வெறுப்பு அரசியலை நிறுத்துவது மிகவும் முக்கியம். ராஷ்ஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் செய்யும் அட்டூழியங்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து