முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி காளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவம்

வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2025      இந்தியா
Tirupati 2023-09-30

Source: provided

திருப்பதி: திருப்பதி காளஹஸ்தி சிவன் கோயிலில் பவித்ரோற்சவம் நடைபெற்றது.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி முதல் நாளில் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பின்னர் பவித்ர பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர், சின்ன ஜீயர், திருமலை திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சாந்தி, கூடுதல் அதிகாரி நாராயண சவுத்ரி, கண்காணிப்பாளர்கள், கோவில் ஆய்வாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

இதேபோல் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 5 நாட்கள் நடக்கும் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரையிலும் அந்தாராலய தரிசனம் (மூலவர் சன்னதியில்) ரத்து செய்யப்பட்டது. மேலும் வழக்கமாக கோவிலில் தினமும் அதிகாலை நடக்கும் கோ-பூஜை, சுப்ரபாத சேவையை தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், கோவிலில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜை வழக்கம் போல் நடப்பதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பவித்ரோத்சவத்தின் ஒரு பகுதியாக கோவிலில் உள்ள குருதட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு, வேதப் பண்டிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து பரத்வாஜ் மகரிஷி, ‘ஸ்ரீ’ என்ற ‘சிலந்தி’, ‘காள’ என்ற ‘பாம்பு’, ‘ஹஸ்தி’ என்ற ‘யானை’ ஆகிய 4 உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ மூர்த்திகள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இருந்து மேள தாளம் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து