எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருச்சி: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பிரசாரத்தை தொடங்கி விட்டன. இதையடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு தயாராகி வருகிறது. இதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜய், தேர்தல் பிரசாரம் தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்தார். ஒவ்வொரு மாவட்ட செயலாளரிடமும் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாக கருத்துக்களை கேட்டு வருகிறார். பூத் வாரியாக அமைக்கப்பட்டு வரும் கமிட்டிகள் பற்றியும் அவர் ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வரும் 13-ம் தேதியில் இருந்து விஜய் பிரசாரத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சியில் இருந்து விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். இந்த தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்துக்கு மக்களுடன் சந்திப்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
முதல் கட்ட சுற்றுப்பயணம் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் போது 10 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் விஜய் ஆதரவு திரட்ட உள்ளார். இந்த 10 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் முக்கிய நகரங்களில் விஜய் ரோடு ஷோ நடத்த உள்ளார். மேலும், முக்கிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி விஜய் பேசவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் பிரசாரம் செய்வது போன்று, விஜய்யின் பிரசாரமும் பதிலடி பிரசாரம் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.
விஜய்யின் சுற்றுப்பயணத்துக்காக சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொகுசு பஸ்சை அதிநவீன வசதிகளுடன் மாற்றி அமைத்துள்ளனர். இந்த பஸ் சமீபத்தில் பனையூர் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சொகுசு வாகனத்தை விஜய் ஆய்வு செய்துள்ளார். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்ட மாநில மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய விஜய் உத்தரவிட்டுள்ளார். அனேகமாக இந்த மாநாடு கொங்கு மண்டலத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மேற்கொள்ளும் முதல்கட்ட தேர்தல் பிரசாரப் பயணம் முடிவடைந்ததும், கொங்கு மண்டல மாநாட்டில் தீவிர கவனம் செலுத்துவார் என்று தெரியவந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


