Idhayam Matrimony

மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும்: அமைச்சர் திட்டவட்டம்

வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2025      தமிழகம்
kv-chezhiyan 2025-01-21

சென்னை, உயர்கல்விக்கான மாநில கொள்கை விரைவில் வெளியீடப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

உயர்கல்விக்கான மாநில கல்வி கொள்கை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. உயர்கல்வித்துறையின் உயர்ந்த மாண்பை கட்டிக் காக்க வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, உரிய நேரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு மாணவர்களின் நலன் காக்கப்படும்.

மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும். உயர்கல்விக்கான மாநில கல்வி கொள்கை விரைவில் வெளியிடப்படும். அதற்கான காலவரம்பை தற்போது இறுதி செய்ய முடியாது. இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து