Idhayam Matrimony

தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் மத்திய அரசு நுழைய திடீர் தடை

வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி: தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின்கீழ், வெளிநாட்டினரை கையாள்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசவிரோத செயல்கள், உளவு பார்த்தல், கற்பழிப்பு, கொலை, பயங்கரவாத செயல்கள், குழந்தை கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினரை இந்தியாவில் நுழையவோ, இந்தியாவில் தங்கி இருக்கவோ அனுமதி மறுக்கலாம். இத்தகைய வெளிநாட்டினரை நாடு கடத்தும்வரை அவர்களது நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தடுப்புக்காவல் முகாம்களில் அடைக்க வேண்டும்.

அதற்காக மாநிலங்கள் தடுப்புக்காவல் முகாம்களை அமைக்க வேண்டும். எந்தவகை விசாவுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினரும் தங்களது பயோமெட்ரிக் பதிவுகளை எடுக்க விசா அதிகாரியை அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் வெளிநாட்டினரை எல்லை பாதுகாப்பு படையினரும், கடலோர காவல்படையினரும் தடுத்து, திருப்பி அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து