முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மக்களுக்கு தீபாவளி பரிசு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து

வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2025      தமிழகம்
GST-2023-05-01

Source: provided

சென்னை: ஜி.எஸ்.டி. வரி குறைப்பு என்பது சிறப்பு தீபாவளி பரிசு என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தனது சுதந்திர தின உரையின் போது கூறியது போல், 56-வது ஜி.எஸ்.டி. கூட்டமானது, நாட்டு மக்கள் அனைவருக்குமான சிறந்த தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. இதன்படி, முன்பிருந்த நான்கு விதமான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைகளானது நீக்கப்பட்டு, 5 மற்றும் 18 சதவீத வரி என்ற அடிப்படையில் இரண்டு அடுக்குகளாக மட்டுமே இனி செயல்பாட்டிலிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பால் மற்றும் ரொட்டி போன்றவற்றிற்கும், தனிமனித மருத்துவக் காப்பீடு மற்றும் உயிர் காப்பீடு போன்றவற்றிக்கும் ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளித்திருப்பது மிகுந்த வரவேற்பிற்குரிய அறிவிப்பாக அமைந்துள்ளது. மேலும், நடுத்தர வர்க்க மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, வீட்டு உபயோகப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

விவசாயப் பொருட்கள் மீதான வரி 5 சதவீதமாக்கப் பட்டுள்ளதுடன், கல்வி சார்ந்து மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, கல்வி, விவசாயம், மருத்துவம் மற்றும் அடிப்படைத் தேவைகள் என்று அனைத்து வகையிலும் நாட்டு மக்களின் நலனறிந்து, ஜி.எஸ்.டி. வரி முறையை சீர்செய்துள்ளது நமது மத்திய அரசு.

ஜி.எஸ்.டி. வரி மீதான அடுத்த தலைமுறை சீர்திருத்த நடவடிக்கை மேற்கொண்டு, மிகச் சிறப்பானதொரு தீபாவளி பரிசினை அறிவித்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும், மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் அவர்களுக்கும், நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து