முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் தலை விரித்தாடுகிறது: திருமாவளவன்

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2025      தமிழகம்
Thirumavalavan 2024-12-16

சென்னை, தென் மாவட்டங்களில் சாதி வன்கொடுமைகள் தலை விரித்தாடுவாதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு சென்னை அசோக் பில்லரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலை விரித்தாடுகிறது. மதுரை மாவட்டம் சாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் இடமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான அளவில் சாதிய ஒடுக்கு முறைகள் அரங்கேறி வருகிறது. வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையிலும் இதுபோன்ற சாதிய கொடுமைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

அ.தி.மு.க.வில் குழப்பம் நிலவுவதற்கு பாஜக தான் காரணம். சசிகலாவால் செயல்பட முடியாமல் போனதற்கு யார் காரணம்? ஓ.பி.எஸ். தனிமையாக செல்வதற்கு யார் காரணம்? டி.டி.வி. தினகரன் தனிக்கட்சி தொடங்கியதற்கு யார் காரணம்? செங்கோட்டையன் அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக செயல்படுவதற்கு யார் காரணம்? என்றால் இதற்கு எல்லாம் ஒரே பதில் பாஜக தான். அ.தி.மு.க. தலைவர்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து