முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்பீலை வாபஸ் பெற்ற சூர்யகுமார்

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2025      விளையாட்டு
Suryakumar 2024-06-21

Source: provided

துபாய்: அவுட் கொடுத்த 3-வது நடுவர்... அப்பீலை வாபஸ் பெற்ற சூர்யகுமார் யாதவ்.. களத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

4 விக்கெட்டுகள்...

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் அரங்கேறிய 2-வது லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை (யு.ஏ.இ.) எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய யு.ஏ.இ. அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை கொத்தாக இழந்தது. வெறும் 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த யு.ஏ.இ. அணி 57 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அலிஷன் ஷரபு 22 ரன்கள் அடித்தார். தொடக்க ஆட்டக்காரர்களை தவிர யாரும் 5 ரன்களை கூட தாண்டவில்லை. இந்திய தரப்பில் 2.1 ஓவர்கள் வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

கவனக்குறைவாக... 

இந்த ஆட்டத்தில் யு.ஏ.இ. பேட்டிங் செய்தபோது 13-வது ஓவரை இந்திய ஆல் ரவுண்டர் ஷிவம் துபே வீசினார். அந்த ஓவரில் துபே வீசிய 3-வது பந்தை எதிர்கொண்ட ஜூனைத் சித்திக் அடிக்க முயற்சித்த போது, அது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் கைக்கு சென்றது. பந்தை தவற விட்ட சித்திக், துபேவின் இடுப்பில் இருந்த டவல் கீழே விழுந்ததை சுட்டிக்காட்டினார். ஆனால் அந்த சமயத்தில் அவர் கவனக்குறைவாக கிரீசை விட்டு சற்று வெளியே நின்றார். இதனை கவனித்த சஞ்சு சாம்சன் உடனடியாக ஸ்டம்பு மீது பந்தை எறிந்து அவுட் கேட்டார். ரீப்ளேவுக்கு பிறகு 3-வது நடுவரும் அவுட் என தீர்ப்பளித்தார். ஆனால் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இது உண்மையான விளையாட்டின் உத்வேகத்துக்கு நல்லதல்ல என கூறி அப்பீலை வாபஸ் பெறுவதாக கள நடுவர்களிடம் கூறினார். இந்த சுவாரசிய சம்பவம் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து