முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ஏன்? கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டி

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2025      விளையாட்டு
Suryakumar 2024-06-21

Source: provided

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் யு.ஏ.இ.-க்கு எதிரான வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது குறித்து விளக்கமளித்துள்ளார்.

57 ரன்னில் சுருண்டது...

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதில் துபாயில் அரங்கேறிய 2-வது லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை (யுஏஇ) எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய யுஏஇ அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை கொத்தாக இழந்தது. வெறும் 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த யுஏஇ அணி 57 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அலிஷன் ஷரபு 22 ரன்கள் அடித்தார். தொடக்க ஆட்டக்காரர்களை தவிர யாரும் 5 ரன்களை கூட தாண்டவில்லை. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணியை...

அடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மா 30 ரன்னில் கேட்ச் ஆனார். சுப்மன் கில் 20 ரன்களுடனும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்திய அணி அடுத்த லீக்கில் 14-ந்தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

முதலில் பந்துவீச்சு.. 

இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், “மைதானத்தின் தன்மையைப் பார்க்க வேண்டும் என்பதற்காக முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தோம். அது 2-வது இன்னிங்சிலும் அப்படியே இருந்தது. எங்கள் வீரர்களிடமிருந்து தெளிவான செயல்பாடுகள் வந்தன. சமீபத்தில் பல வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்காக இங்கு இருந்தனர். மைதானம் நன்றாக இருந்தாலும், அது சற்று மெதுவாக இருந்தது. இங்கு இப்போது மிகவும் வெப்பமாக உள்ளது.

பும்ராவிடமிருந்து... 

குல்தீப் நன்றாக செயல்பட்டார், ஹர்திக், துபே மற்றும் பும்ராவிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்தது. அபிஷேக் சர்மா உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இலக்கு 200 அல்லது 50 உட்பட எதுவாக இருந்தாலும் அவர் அணியை முன்னிறுத்தி விளையாடுவது நம்ப முடியாதது. அனைவரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு உற்சாகமாக உள்ளனர்” என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து