எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்பலூர்: பெரம்பலூரில் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் த.வெ.க. தலைவர் விஜயும், அவரது கட்சி நிர்வாகிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள்.
விஜய் வருகிற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்க உள்ளார். திருச்சி மரக்கடை பகுதி எம்.ஜி.ஆர். சிலை அருகே வருகிற 13-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். பெரம்பலூரில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. இதற்கு த.வெ.க. நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தகவல் வெளியானது. இந்நிலையில், பெரம்பலூரில் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்ட காமராஜர் வளைவுப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காமராஜர் வளைவுப் பகுதிக்கும் பதில் மேற்கு வானொலித்திடல் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


