Idhayam Matrimony

சம்பள உயர்வை எதிர்த்து போராட்டம்:இந்தோனேசியாவில் அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் அதிரடி நீக்கம்

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2025      உலகம்
Indonesia-Strike

Source: provided

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சம்பள உயர்வை எதிர்த்து போராட்டத்தில்  நிதி மந்திரி உள்பட 5 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தோனேசியாவில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதற்கிடையே அங்குள்ள எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு, வீட்டு வாடகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக தனிநபர் வருமானம் சுமார் ரூ.17 ஆயிரமாக உள்ள நிலையில் எம்.பி.க்களின் சம்பளம் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் பலியாகினர். இதனால் எம்.பி.க்களின் சம்பளம், சலுகைகள் குறைக்கப்பட்டன. மேலும் அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தியுற்றதால் மந்திரி சபையிலும் அதிரடி மாற்றத்தை அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அறிவித்தார். அதன்படி நிதி மந்திரி ஸ்ரீ முல்யானி இந்திராவதி, ராணுவ மந்திரி புடி குணவன் உள்பட 5 மந்திரிகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து