முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு புதிய உறுப்பினராக அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை நியமனம்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      தமிழகம்
EPS 2025-06-13

Source: provided

சென்னை : மாநிலங்களவை உறுப்பினர் ஐ. எஸ். இன்பதுரை மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஐ. எஸ். இன்பதுரை மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து ஆறு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவற்றில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இன்பதுரை மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் அமைத்து உள்ள ஆலோசனைக்குழுவில், கல்வித் துறையின் வளர்ச்சி, புதிய திட்டங்கள், நாட்டின் கல்விக் கொள்கை முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்களில் வழிகாட்டும் வகையில், இன்பதுரை எம்.பி. இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கான உத்தரவு, பாராளுமன்ற விவகாரத் துறை மற்றும் தொடர்புடைய கல்வித் துறைகளுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருப்பது, தமிழ்நாட்டிற்கும் அ.தி.மு.க.விற்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்துள்ளது என்று கட்சித் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து