எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். சுதந்திரத்துக்கு பிறகு மிசோரம் தலைநகரை இந்திய ரயில்வேவுடன் இணைக்கும் முதல் ரயில் பாதை இதுவாகும்.
மிசோரத்தை இந்திய ரயில்வேவுடன் இணைக்கும் பைராபி - சாய்ராங் இடையேயான ரயில் பாதை ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 45 சுரங்கப்பாதைகள் மற்றும் 55 மேம்பாலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 52 கி.மீ. தூரம் கொண்ட இந்த பாதையில் 88 சிறிய பாலங்களும் உள்ளன.
ஐஸ்வாலில் நடைபெறும் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மிசோரமின் லெங்புய் விமான நிலையத்தில் இருந்தபடி, காணொலி காட்சி வழியாக பைராபி - சாய்ராங் ரயில்வே வழித்தடத்தை தொடங்கிவைத்தார்.
தில்லி, கொல்கத்தா மற்றும் குவஹாத்தியை இணைக்கும் மூன்று விரைவு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும், மிசோராமில் ரூ. 9,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


