Idhayam Matrimony

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      தமிழகம்
Indian-Commu-TN-

சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் பதவி வகித்து வந்தார். தற்போது அவரது பதவி காலம் முடிவடைந்துள்ளது. இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், சென்னை சூளைமேடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அடுத்த மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இவர் முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அடுத்த மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து